Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தப்பிக்க பார்த்த வாலிபர்…. குடிபோதையில் தகராறு…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

வாகன சோதனையின்போது குடிபோதையில் தகராறு செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறைச்சாலையில் அடைத்தனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வெளிப்பாளையம் காவல்துறையினர் உதவி கலெக்டர் அலுவலகம் எதிரே வரும் வாகனங்கள் மற்றும் பொது மக்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். அதன்பின் முகக்கவசம் அணியாமல் வந்த ஒருவரை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது குடிபோதையில் இருந்த அவர் தனது உறவினருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு அவசரமாக செல்வதாக காவல்துறையினரிடம் பொய்க் காரணம் கூறி அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் நாகூர் அலகுகாரன் தோட்டத்தை சேர்ந்த செல்லமுத்து என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் செல்லமுத்து திடீரென ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையினரை அவதூறாக பேசியுள்ளார். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று 5 சட்டப்பிரிவுகளின் கீழ் செல்லமுத்து மீது வழக்குப்பதிவு செய்து சிறைச்சாலையில் அடைத்தனர்.

Categories

Tech |