10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையினரின் குழந்தைகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிசுகளை வழங்கியுள்ளார்.
தமிழக காவல்துறை சார்பாக 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்த காவல்துறையினரின் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பரிசு வழங்குவது வழக்கம். அதன்படி 2020ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த 10 ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்த மாணவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெற்றுள்ளது. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு உயிர் கல்விக்கு தேவையான சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரின் முன்னிலையில் மாணவ மாணவியர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் உயர்கல்விக்கான ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டரான முத்துப்பேச்சி மற்றும் பல காவல் துறையினர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்துள்ளனர்.