Categories
சினிமா தமிழ் சினிமா

தொகுப்பாளர் மாகாபாவின் மனைவியா இவர்?… வெளியான அழகிய புகைப்படம்…!!!

தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் மாகாபா ஆனந்த் . தற்போது இவர் சூப்பர் சிங்கர் 8, சின்னத்திரை சீசன் 3 ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் . மேலும் இவர் வானவராயன் வல்லவராயன், கடலை, அட்டி, பஞ்சுமிட்டாய் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் மாகாபா ஆனந்த் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் செல்பி புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மாகாபாவின் மனைவியா இவர் ? என ஆச்சரியமடைந்துள்ளனர். தற்போது இந்த அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |