Categories
கிரிக்கெட் விளையாட்டு

மொயின் அலி, சாம் கரண் சந்தேகம்…. CSK-வுக்கு பின்னடைவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருகிறது.  நோய்த்தொற்றால் மக்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், பல்வேறு  கிரிக்கெட் வீரர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால்  பல்வேறு கிரிக்கெட் போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டு வந்தது.

அந்த வகையில் IPL 2021 கிரிக்கெட் தொடரும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் செப்டம்பரில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸை சேர்ந்த இங்கிலாந்து வீரர்களான சாம் கரண், மொயின் அலி மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம். ஏனெனில் அந்த நேரத்தில் இங்கிலாந்து அணி வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இதனால் சிஎஸ்கே அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |