Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! அன்பு கூடும்….! மனக்கலக்கம் நீங்கும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! எல்லாம் சாதகமாக நடக்கும்.

இன்றைய நாளில் விடா முயற்சிக்கு பலன் உண்டு. ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். சுபகாரிய பேச்சு முடிவாகும். மங்கையரால் ஏற்பட்ட மனக்கலக்கம் மாறிவிடும். வழக்குகள் உங்கள் பக்கம் சாதகமாக இருக்கும். சில விஷயங்களில் கவனமாக செயல்பட வேண்டும். கலைஞர்கள் தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளை பெறலாம். அரசியல்வாதிகளுக்கு நல்ல பெயர் எடுக்கும் சூழ்நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எல்லாம் ஆதரவாக இருக்கக் கூடும். வரவேண்டிய பணம் தங்கு தடையின்றி வந்து சேரும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கான திட்டங்களும் இருக்கும்.

புதிதாக காதல் வயப்படகூடிய சூழல் இருக்கின்றது. தாய்மாமன் வகையில் உதவிகள் கிடைக்கும். தந்தையிடம் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும்போது பொறுமை வேண்டும். காதலில் உள்ளவர்கள் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். காதல் கைகூடி திருமணத்தில் போய் முடியும். மாணவர்களுக்கு துணிச்சல் கூடும். கல்வி மீது அக்கறை ஏற்படும். பெற்றோரிடம் முன் கோபம் காட்ட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது கருநீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கருநீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் முன்னேற்றம் காத்திருக்கின்றது.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 9                                                                                                            அதிர்ஷ்டமான நிறம்: கருநீலம் மற்றும் மஞ்சள்

Categories

Tech |