தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில் ஜூன் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய இருப்பதால் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். இது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உரிய பாதுகாப்பு விதிமுறைகளுடன் ஒருவரை மட்டும் அனுமதித்து சலூன் கடைகளை திறக்க வேண்டும் என தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் மத்திய சங்கம் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.அதில், 40 நாட்களாக கடைகளை திறக்க முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். இதனால் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரண நிதியாக 15 ஆயிரம் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.