கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிபிஎஸ்சி12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது. இதையடுத்து மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்து 12 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு தொடர் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த குழு இன்னும் ஒரு வாரத்தில் இறுதி முடிவு எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் தரப்படும் மாணவர்கள் குறித்த தரவுகளை பெற்று அதன் அடிப்படையில் தான் மதிப்பெண் வழங்குவது குறித்த இறுதி முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிக நீண்ட பணி என்பதனால் காலதாமதம் ஆவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சிபிஎஸ்இ செயலாளர் தெரிவித்துள்ளார்.