Categories
ஆன்மிகம் இந்து

பூஜை அறையில் எரிந்துகொண்டிருக்கும் விளக்கை…. எதைப் பயன்படுத்தி அணைக்கவேண்டும்…. கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்…!!!

நமது வீட்டில் பூஜை அறையில் எரிந்துகொண்டிருக்கும் விளக்கை எப்படி அணைப்பது என்பது பற்றி இன்னும் தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

நம் வீட்டு பூஜை அறையில் எரிந்துகொண்டிருக்கும் விளக்கை பொதுவாக நாம் வாயால் ஊதி அணைக்க கூடாது. முதலில் நான் அணைத்தல் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது. சாஸ்திர ரீதியாக விளக்கை அணைக்கிறேன் விளக்கை அணைக்க போகிறேன் என்ற வார்த்தையை வீட்டில் உபயோகிப்பது அமங்கலம். அப்படி இருக்கும் பொழுது எப்படி கூற வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். விளக்கை அணைப்பது என்கின்ற சொல்லை உபயோகிக்காமல் விளக்கை அமர்த்துதல், அமர்கிறேன், அமர்த்த போகிறேன் என்பதை பயன்படுத்த வேண்டும்.

இல்லை என்றால் எதுவும் சொல்லாமல் விளக்கை அமர்த்தவேண்டும். நமது வீட்டு பூஜை அறையில் எப்பொழுதும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 5 முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றுவது மிகவும் நல்லது. அப்படியே ஏற்றி வழிபடுவதால் மங்களம் உண்டாகும். வீட்டில் விளக்கு வைத்த பின்னர் ஊனமுற்றவர்கள் ஏழை எளிய குழந்தைகளுக்கு நீங்கள் உங்களால் முடிந்த பொருட்களை தர்மம் செய்தால் உங்கள் வீட்டில் வறுமை நீங்கும். செல்வம் பெருகும் என்பது ஐதீகம். அதுமட்டுமில்லாமல் பூஜையறையில் ஏதாவது ஒரு பொருள் தீர்ந்து விட்டால் அல்லது குறைந்து விட்டால் அதை இல்லை என்று சொல்லக் கூடாது. பொதுவாக நாம் எல்லா விஷயத்திலும் இல்லை என்கின்ற வார்த்தையை உபயோகிக்க கூடாது என்பதுதான் ஆன்மீக விதி.

அதற்கு பதிலாக கற்பூரம் வாங்கவேண்டும். ஊதுபத்தி வாங்கவேண்டும் என்ற சொல்லை உபயோகிக்க வேண்டும். விளக்கை ஏற்றி சிறிது நேரம் கழித்து உங்கள் கையில் கிடைக்கும் ஏதாவது ஒரு பொருளை வைத்து விளக்கை அமர்த்தி விடக்கூடாது. ஒன்று புஷ்பங்கள் கொண்டு விளக்கை அமர்த்தி விடவேண்டும் அல்லது கற்கண்டு கொண்டு அணைப்பது மிகவும் நல்லது. வீட்டில் எப்போதும் கற்கண்டு வைத்திருப்பது மிகவும் நல்லது. அதேபோல் பச்சைக் கற்பூரமும், கற்கண்டும் வீட்டின் பூஜை அறையில் வைத்து, நெய்வேதியத்திற்கு எதுவும் கிடைக்காத நேரத்தில் கற்கண்டை நெய்வேதியமாக படைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Categories

Tech |