Categories
டெக்னாலஜி

வீடு, நிலம் வாங்கும்போது முக்கியமா இத கவனிங்க…. எளிதாக ஆன்லைனில் பட்டா பதிவிறக்கம் செய்வது எப்படி…?

ஆன்லைனில் பட்டா பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக நாம் வீடு, நிலம், வாங்குகிறீர்கள் முதலில் அந்த சொத்து யார் பெயரில் உள்ளது அல்லது ஏதேனும் சிக்கல்கள் உள்ளதால் அது குறித்த விவரங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு பட்டா மிகவும் அவசியம். தற்போது வீடு, நிலம் வாங்கும் பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று பட்டா. பத்திரம் பதிவு செய்த பிறகு பட்டா வாங்கும் போதுதான் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. எனவே முதலில் நாம் பட்டாவை சரி பார்த்து பிறகு நிலம், வீடு வாங்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. தற்போது உள்ள சூழ்நிலையில் நாம் ஆன்லைன் மூலமாகவே பட்டா பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அது எப்படி என்பதை பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.

பட்டாப் பதிவு என்பது நில உரிமை மற்றும் நில அளவை தொடர்பான உள்ளீடு ஆகும். ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ் பட்டா. கிராமப்புறங்களில் ஹெக்டேர்ஃஆர்ஸ் என்ற முறையில் கணக்கிடப்படும். இந்த தகவலை ஆன்லைனில் பெறுவதற்கு https://eservices.tn.gov.in/ என்ற இணைய தளத்தை திறக்க வேண்டும். இதன் முகப்பு பகுதியில் நில உரிமை என்று கொடுக்கப்பட்டிருக்கும். அதனை கிளிக் செய்ய வேண்டும்.

அப்போது ஒரு பார்ம் கிடைக்கும். அதில் கிராமப்புறம், நகர்ப்புறம் என்று கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் எதை சேர்ந்தவர்கள் என்பதை தேர்வு செய்து சப்மீட் கொடுக்க வேண்டும். உங்களது மாவட்டம், வட்டம் போன்ற தகவல்களை கொடுக்க வேண்டும். பிறகு உங்களது பட்டா எண், புல எண்ணை கொடுக்க வேண்டும். அந்த  பகுதியில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் security codeஐ டைப் செய்து சப்மீட் கொடுக்கவேண்டும். அப்போது உங்களது பட்டா தொடர்பான விவரங்கள் அனைத்தும் கிடைக்கும்.

Categories

Tech |