Categories
உலக செய்திகள்

28 மனைவிகள் முன்னிலையில்…. 135 பிள்ளைகள் கூடி நிற்க…. 37 வது திருமணம் செய்த பலே தாத்தா…!!!

ஐபிஎஸ் அதிகாரியான ரூபன் சர்மா என்பவர் “துணிச்சலான மனிதர் என்ற வாசகத்தோடு வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார் .அதில் முதியவர் ஒருவர் 37வது திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் இந்தத் திருமணம் ஆனது எங்கே? எப்போது நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

ஆனால் இதில் 135 பிள்ளைகள், 126 பேரக்குழந்தைகளும் கலந்து கொண்டுள்ளனர்.  அந்த முதியவரின் 28 மனைவிகளும் தற்போது உயிருடன் இருக்கின்ற நிலையில் அவர்களுடைய முன்னிலையில் 37வது திருமணத்தை வெகு விமரிசையாக நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |