Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட்-2 முதல் மீண்டும் தொடங்கும்…. UPSC சிவில் சர்வீஸ் 2020 நேர்முகத்தேர்வு – அறிவிப்பு…!!!

நாடு முழுதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு முக்கிய தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. அந்த வகையில் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2020க்கான நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 2 முதல் மீண்டும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு www.upsc.gov.in, upsconline.nic.in ஆகிய இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே யுபிஎஸ்சி முதனிலை தேர்வுகள் ஜூன்-27 க்கு பதிலாக அக்டோபர் 21 க்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |