தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதிகளாக முழு ஊரடங்கு மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை மக்கள் வீட்டில் இருந்தபடியே வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் மருத்துவர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி 9498346510, 9498346511, 9498346512, 9498346513, 9498346514 என்ற வாட்ஸ் அப் எண்களில் மக்கள் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மருத்துவ ஆலோசனைக்காக gccvidmed என்ற மொபைல் செயலியும் செயல்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சி தலைமை இடத்தில் 100 இணைப்புகள் கொண்ட 04446722300 என்ற எண்ணில் மன நல ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது.