தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்பு செமஸ்டர் தேர்வு ஜூன் 21-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கான விரிவான அட்டவணை ஜூன் 14 ஆம் தேதி பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். ஜூன் 15ஆம் தேதி ஹால்டிக்கெட் வெளியாகும். ஆன்லைன் தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். மேலும் விவரங்களை www.unom.ac.in என்ற இணையதளத்தில் காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.