உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது உலகமெங்கும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜி 7 மாநாட்டை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 50 கோடி தடுப்பூசிகள் உலகம் முழுவதும் அமெரிக்கா சார்பாக வழங்கப்படும் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து தற்போது இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்து சார்பாக அடுத்த ஆண்டிற்குள் 10 கோடி தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதன் முதற்கட்டமாக செப்டம்பர் மாதத்திற்குள் 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.