மேட்டூர் அணையின் பாசனத்தின் மூலமாக சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வருடந்தோறும் ஜூன்-12 ஆம் தேதி முதல் ஜனவரி-28 ஆம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.
இந்நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.33 அடியாக உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறந்து விடப்படுகின்றது. இந்நிலையில் இந்நிலையில் கல்லணையில் நடக்கும் தூர்வாரும் பணியை காலை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். பின்னர் தஞ்சை வல்லத்தில் உள்ள முதலை முத்துவாரி, வெண்ணாறு தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்.