Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சித்தரிக்கப்பட்ட ஆபாச புகைப்படம்… இளம்பெண்ணின் விபரீத முடிவு… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மலையடி வெண்பாக்கம் கிராமத்தில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சுவேதா என்ற மகளும் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் விதவிதமாக பதிவிடுவதில் சுவேதா மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதனால் இன்ஸ்டாகிராம் எனும் சமூக வளைதளத்தில் சுவேதா தனது புகைப்படத்தை வழக்கம் போல பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் நவீன தொழில்நுட்பம் மூலம் சில மர்ம நபர்கள் சுவேதாவின் படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக இருப்பது போல் சித்தரித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டதை பார்த்து சுவேதா அதிர்ச்சி அடைந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த சுவேதா வீட்டிற்கு தெரிந்தால் என்ன செய்வார்களோ என்ற அச்சத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து செங்கல்பட்டு காவல்துறையினர் சுவேதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |