Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 மகன்கள் இருந்து எதுக்கு…? தவிப்பில் முதியவர் செய்த செயல்… சென்னையில் நடந்த சோகம்…!!

இரண்டு மகன்களும் சரியாக கவனிக்காததால் காப்பகத்தில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள செம்பியம் சின்ன குழந்தை 1-வது தெருவில் இருக்கும் முதியோர் காப்பகத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் தங்கியிருக்கின்றனர். இந்த காப்பகத்தில் குரோம்பேட்டை பகுதியில் வசிக்கும் கோவிந்தராமன் என்ற முதியவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சேர்ந்துள்ளார். இந்நிலையில் காப்பகத்தில் இருக்கும் குளியலறையில் முதியவர் தனது வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த செம்பியம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு கோவிந்த ராமனின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றதால் தனது இரண்டு மகன்களையும் தனியாக நின்று ஆளாக்கி திருமணம் செய்து வைத்துள்ளார்.

ஆனால் இரண்டு மகன்களும் அவரை சரியாக கவனிக்காததால் தனது தம்பியான குமார் என்பவரது வீட்டில் கோவிந்தராமன் சில காலம் தங்கி உள்ளார். இதனையடுத்து வயது முதிர்ச்சியின் காரணமாக தனது அண்ணனை கவனிக்க முடியாத குமார் முதியோர் காப்பகத்தில் கோவிந்தராமனை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சேர்த்துள்ளார். இந்நிலையில் தன்னை கவனிக்க யாரும் இல்லாத மன உளைச்சலில் இருந்த கோவிந்த ராமன் யாரிடமும் பேசாமல் தனியாக இருந்து தற்கொலை செய்துகொண்டது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |