Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உடலை வாங்க மாட்டோம்… உறவினர்களின் போராட்டம்… கோவையில் பரபரப்பு…!!

விபத்தில் உயிரிழந்த தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போளுவாம்பட்டி பகுதியில் பழனி, பழனி சாமி என்ற இரண்டு தூய்மைப் பணியாளர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் பேட்டரி ஆட்டோ நொய்யல் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்து விட்டனர். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அப்போது விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு காவல்துறையினர் உயர் அதிகாரிகளிடம் இது குறித்து பேசுவதாக உறுதி அளித்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். மேலும் இறந்தவர்களின் உறவினர்கள் இதுகுறித்து கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

Categories

Tech |