வலிப்பு ஏற்பட்டதால் ஆறாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் டாக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உப்பிலிபாளையம் பகுதியில் ராம் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வத்சலாதேவி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு வத்சலாதேவி விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டார். இந்நிலையில் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த வத்சலாதேவி மருத்துவமனையில் அதற்கான சிகிச்சையை பெற்றுள்ளார். இதனையடுத்து துவைத்த துணிகளை காயப் போடுவதற்காக அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் மொட்டை மாடிக்கு வத்சலாதேவி சென்றுள்ளார்.
அப்போது திடீரென வலிப்பு ஏற்பட்டதால் 6-வது மாடியிலிருந்து வத்சலாதேவி தவறி கீழே விழுந்து விட்டார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த சிங்காநல்லூர் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.