Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் கண்டிப்பா செய்யலாம்… அதிகாரிகளுக்கு அறிவுரை… கலெக்டரின் ஆலோசனை கூட்டம்…!!

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகள் தினமும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் இணைந்து கலெக்டர் அலுவலக அரங்கத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்திற்கு கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கியுள்ளார். இதில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சீனிவாசன் சேகர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.

இந்நிலையில் இம்மாவட்டத்தில் நகர்ப்புறத்தை விட கிராமப்புற பகுதிகளில் பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் கிராமப்புறங்களில் பொது மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆகிய உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து ஊராட்சிமன்ற தலைவர்கள் தொற்று பரவலை தடுக்கும் விதமாக அனைத்து குக்கிராமங்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். அதில் தூய்மை பணிகள் மூலம் உடனுக்குடன் கிராமப்பகுதிகளில் சேரும் குப்பைகளை அகற்ற வேண்டுமென தெரிவித்துள்ளார். இதனால் இந்த  பணிகளை ஊராட்சி ஒன்றிய அளவில் நியமனம் செய்யப்பட்ட அலுவலர்கள் தீவிர ஆய்வு செய்து தடுப்புப் பணிகளை கண்காணித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தினமும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |