Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஜன்னலோரம் நின்று கொண்டு… முதியவர் செய்த வேலை… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கல்வீரம்பாளையம் பகுதியில் ஸ்ரீஹரி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீஹரி தனது வீட்டில் இருக்கும் ஜன்னல் ஓரத்தில் செல்போனை வைத்துவிட்டு உள்ளே சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்த போது வெளியே நின்று கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் ஜன்னல் ஓரத்தில் வைக்கப்பட்டு இருந்த செல்போனை திருடி விட்டு சென்றுள்ளார். இதுகுறித்து ஸ்ரீஹரி வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்துள்ளனர்.

அந்த விசாரணையில் அவர் மதுரை மாவட்டத்தில் வசிக்கும் பாஸ்கர் என்பதும், ஸ்ரீஹரியின் செல்போனை இவர்தான் திருடி சென்றதும் தெரியவந்துள்ளது. மேலும் பாஸ்கர் மீது ஏராளமான திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்ததோடு, பாஸ்கரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |