Categories
உலக செய்திகள்

மில்லியன் கணக்கில் போலி மாத்திரைகள்.. அதிகாரிகளின் சோதனையில் அதிர்ச்சி..!!

சுவிட்சர்லாந்து உட்பட சுமார் 55 நாடுகள் சேர்ந்து உலகம் முழுக்க சோதனை நடத்தியதில் மில்லியன் கணக்கான போலியான மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் அதிகாரிகள் இந்த சோதனையில், சுமார் 695 பார்சல்களை பரிசோதனை செய்திருக்கின்றனர். அவற்றில் போலியான மற்றும் சட்டவிரோதமான மருந்துகள் கண்டறியப்பட்டது. பத்து பாக்கெட்டுகளில் ஒன்பதில் போலியான வயாகரா மருந்துகள் இருந்துள்ளது. இந்த மருந்துகளால் மக்களின் உடல்நலம் பாதித்துள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

மேலும் அட்டையில் ஒரு மருந்தின் பெயர் எழுதப்பட்டிருக்கிறது. பாக்கெட்டில் வேறு மருந்துகள்  இருந்துள்ளது. குறிப்பிட்ட அளவை விட குறைவான மருந்துகள் தான் பாக்கெட்டில் வைத்திருக்கிறார்கள். இந்த சோதனை திட்டத்தின் மூலமாக உலகம் முழுக்க சுமார் 9 மில்லியன் போலி மாத்திரைகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து இதில் தொடர்புடைய 1,13,000 இணையதளங்கள் முடக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |