திருவெண்காடு அருகில் பட்டவெளி வாய்க்கால் சேதமடைந்து காணப்படுவதால் அதனை சீரமைக்கும் நடவடிக்கைகள் எடுக்க விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மங்கைமடம் கிராமத்தின் முக்கிய பாசன வாய்க்கால் ஆக பட்டவெளி வாய்க்கால் இருக்கின்றது. இந்த வாய்க்கால் மணிகர்ணிகை ஆற்றிலிருந்து பிரிந்து எம்பாவை, நெருஞ்சிகொள்ளை, மங்கைமடம் போன்ற பகுதிகளில் உள்ள 400-க்கும் மேற்பட்ட ஏக்கர் நில வயல்களுக்கு பாசன வசதி கிடைக்கின்றது. எனவே மணிகர்ணிகை ஆற்றிலிருந்து தொடங்கும் இடத்தில் வாய்க்கால் மதகு முழுவதுமாக சேதமடைந்து இருப்பதனால் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து வருகின்ற 12-ஆம் தேதி காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் சேதமடைந்துள்ள மதகை சரி செய்தால் தான் மேற்கண்ட வாய்க்காலுக்கு தண்ணீர் செல்ல ஏதுவாக இருக்கும். மேலும் இந்த வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறும் விளைநிலத்தில் தற்போது 100 ஏக்கர் அளவிற்கு குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியபோது இந்த மதகு சேதமடைந்து இருப்பதனால் பலமுறை பொதுப்பணித் துறையிடம் புகார் தெரிவித்தும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளனர். எனவே சேதமடைந்து காணப்படும் வாய்க்கால் மதகு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.