கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்னதாக அரசின் அதிகாரபூர்வ இணையதளமான கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு முன்பதிவு செய்தால் தான் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும். இப்படி முன்பதிவு செய்பவர்கள் தவறுதலாக பலதடவை முயற்சி செய்கின்றனர்.
இந்நிலையில் கோவின் இணையதளத்தில் 24 மணி நேரத்தில் தடுப்பூசிக்கு பதிவு செய்ய ஆயிரம் முறைக்கு மேல் தேடுவோர், ஐந்து முறைக்கு மேல் OTP-யை பெறுவோரின் பயனாளர் கணக்கு ஒரு நாளுக்கு முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவின் தளத்துக்குள் இருக்கும் 15 நிமிடங்களுக்குள் 20 முறைக்கு மேல் தேடுவோர் தானாகவே அந்த தளத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.