பொருளாதார வீழ்ச்சியை மறைப்பதற்கு மத்திய அரசு நாடகம் நடத்திக் கொண்டு இருப்பதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் சாடியுள்ளார்.
திராவிடர் கழக 75ஆம் ஆண்டு பவள விழா சேலத்தில் நடைபெற்றது. இதில் திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி , திமுக தலைவர் முக.ஸ்டாலின் , மக்களவை உறுப்பினர் திருமாவளவன் என பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.பின்னர் பேசிய ஸ்டாலின் இந்தியாவினுடைய பொருளாதாரம் அடி பாதாளத்திற்கு போய்க் கொண்டிருப்பதை பார்க்கின்றோம்.வாகன விற்பனை 31 சதவீதம் குறைந்துவிட்டது. பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட மோட்டார் தொழிற்சாலைகள் வீழ்ச்சியை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது.
கடந்த 4 மாதத்தில் 3 லட்சம் ஊழியர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். இதையெல்லாம் மறைப்பதற்கு தான் சிதம்பரம் கைது என்ற நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள் இதை பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள். பொருளாதாரப் வீழ்ச்சி பற்றி மறந்து விடுவார்கள் என்று என்ற எண்ணத்திலேயே திட்டமிட்டு சதி செய்து இந்தக் நாடகத்தை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று முக.ஸ்டாலின் தெரிவித்தார்.