தேனி மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் நேற்று தேனி பழைய பேருந்து நிலையம் அருகே திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்தும், விலை உயர்வை குறையாத மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் தமிமுன் அன்சாரி தலைமை தாங்கியுள்ளார்.
இதனையடுத்து கூடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சாகுல் ஹமீது தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சபீர், நகர செயலாளர் காதர், பொருளாளர் சபரிதீன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் பெரியகுளம், உத்தமபாளையம், கம்பம், சின்னமனூர் ஆகிய இடங்களிலும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து பல கோஷங்களை எழுப்பி உள்ளனர்.