வீட்டின் வாசலில் துணி துவைத்து கொண்டிருக்கும் போது மின் வயரில் கை பட்டதால் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜான்சிராணி பகுதியில் ஜெகன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பைரவி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வார்டு மேலாளராக தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பைரவின் கணவர் மற்றும் மகன்கள் வீட்டினுள்ளே இருந்துள்ளனர். அந்த நேரத்தில் பைரவி தனது வீட்டின் வாசலில் துணி துவைத்து கொண்டிருந்தார்.
அப்போது அருகில் உள்ள மின்சார மோட்டாரில் இருந்த வயரில் எதிர்பாரா விதமாக திடீரென பைரவியின் கையில் உரசி உள்ளது. இதனால் மின்சாரம் தாக்கியதில் பைரவி தூக்கி வீசப்பட்டுள்ளார். அப்போது பைரவின் அலறல் சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்த அவரது கணவர் மற்றும் மகன்கள் ஓடிவந்து பார்த்துள்ளனர். இதனை அடுத்து பேச்சு மூச்சின்றி கீழே மயங்கி கிடந்த பைரவியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிக்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.