Categories
தேசிய செய்திகள்

மனைவியின் தங்கை மீது ஏற்பட்ட ஆசை… தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை இப்படியா செய்வது… கணவனால் ஏற்பட்ட கொடூரம்…!!!

மனைவியின் தங்கை உல்லாசமாக இருக்க மறுப்பு தெரிவித்த காரணத்தினால் அவர் மீது ஆசிட் வீசிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத் என்ற பகுதியில் வசித்து வரும் யாதவ் என்பவரின் வீட்டில் மனைவியும், அவரது தங்கையும் வசித்து வருகின்றனர். அந்த சிறுமி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். யாதவுக்கு அந்த சிறுமி மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதனால் பல முறை அவரை உல்லாசமாக இருக்க கூப்பிட்டு டார்ச்சர் செய்துள்ளார். அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த யாதவ் கடந்த மூன்றாம் தேதி அந்த சிறுமி தூங்கும் போது அவரது முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளார்.

பிறகு அந்தப் பெண் வலியால் துடிக்க அவரது தாய் மற்றும் சகோதரி இருவரும் ஓடி வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது இளைஞர் யாதவ் ஒன்றும் தெரியாதது போல் வந்து நின்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் குடும்பத்திலுள்ளவர்களை விசாரணை செய்த போது யாதவ் தான் செய்த தவறை ஒப்புக் கொண்டுள்ளார். பிறகு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |