மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்து ரூ.96.94 க்கும், டீசல் 23 காசுகள் உயர்ந்து 91.15 க்கும் விற்பனையானது. இதனைத்தொடர்ந்து இன்று பெட்ரோல் லிட்டருக்கு 25 காசுகள் அதிகரித்து ரூ97.19 க்கும், டீசல் 27 காசுகள் அதிகரித்து ரூ.91.42 க்கும் விற்பனையாகிறது. இதனால் தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூபாய் 100 எட்டி விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அவ்வாறு விலை உயர்ந்தால் காய்கறி அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும், வாகனங்களின் வாடகை கட்டணம் மேலும் உயரும். எனவே பொதுமக்கள் நலன் கருதி பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வாழ்வாதாரத்தை இழந்து இருக்கும் மக்களின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் உள்ளது என்றும் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.