அரசிற்கு சொந்தமான நிலத்தில் இருந்த மணல் கடத்திய குற்றத்திற்காக இருவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாத்தூர் விவேகானந்தர் நகர் அருகே அரசிற்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் அமைந்துள்ளது. தற்போது அங்கு ஜே.சி.பி எந்திரம் மூலம் கிராவல் மண் மற்றும் மணல்களை கடத்தியதால் 30 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி மாத்தூர் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது சிலர் ஜே.சி.பி மூலம் மணல் அள்ளி லாரியின் மூலம் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்ததுள்ளது. இதனை அடுத்து மணல் கடத்திய குற்றத்திற்காக ஆம்பூர்பட்டி கிராமத்தை வசிக்கும் முருகன் என்ற லாரி டிரைவரையும் மற்றும் திருச்சி மாவட்டத்தை வசிக்கும் சதீஷ் குமார் என்ற ஜே.சி.பி டிரைவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.