Categories
மாநில செய்திகள்

உங்கள் பகுதியில் ஏதாவது பிரச்சினையா…? இந்த எண்ணுக்கு அழையுங்கள் – தமிழக அரசு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஆபத்து விளைவிக்கக்கூடிய பிரச்சனைகள்  ஏதேனும் இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஏதுவாக 94 5869848 என்ற வாட்ஸ்அப் அல்லது https://beta-tnsmart.rimes.int/index.php/EmergencyCall என்ற இணையதள முகவரியில்  தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.

Categories

Tech |