முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் புழல் சிறையில் இருக்கின்றனர். இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே சிறையில் இருக்கும் தனது மகனான பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக நீண்ட நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார்.
இதையடுத்து அற்புதம்மாளின் வேண்டுகோளை உரிய பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின், அவருக்கு 30 நாட்கள் விடுப்பு கொடுத்து உத்தரவிட்டார். இந்நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி இன்று ட்விட்டரில் இன்று பலரும் ஆதரவு திரட்டி வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் எழுவர் விடுதலை குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இயக்குனர் நவீன், “ஒரு கையெழுத்து இருந்தால் சென்ற வருடமே விடுதலை கிடைத்திருக்கும். ஆனால் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும் கையொப்பமிட மனம் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் இந்த விடியலுக்கான இந்த அரசு என்று குறிப்பிட்ட அவர், விடுதலை சாத்தியமாகும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.