Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட பயம் இல்லை… வாலிபர்களின் மூர்க்கத்தனமான செயல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கஸ்தூரிபாய் நகரில் ஆட்டோ டிரைவர் அய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் பிரதி மங்கலத்தில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் அய்யப்பனை கத்தியால் குத்தியதோடு அவரிடமிருந்த 1000 ரூபாய் மற்றும் விலை மதிப்பில்லா செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதனையடுத்து படுகாயமடைந்த அய்யப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சின்னசேலம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து மோட்டூர் சுங்கச்சாவடி அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையின் போது அவர் சென்னை பாடி புதூர் பகுதியில் வசிக்கும் தேவன் பிரகாஷ் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் இவர் தனது நண்பரான கோகுல் என்பவருடன் சேர்ந்து அய்யப்பனை கத்தியால் குத்தி பணம் மற்றும் செல்போன் பறித்து சென்றவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் தேவன் பிரகாசை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதன்பின் தலைமறைவாக உள்ள தேவன் பிரகாஷின் நண்பரான கோகுலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |