மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உலகிலேயே பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 2 நாடுகளில் மட்டும் தான் இன்றளவும் போலியோ நோயின் தாக்கம் இருக்கிறது. இந்த போலியோ நோய் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது . இந்நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க போலியோ சொட்டு மருந்து போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்ற ஆண்டு பாகிஸ்தானில் 84 குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த ஆண்டு ஒரு குழந்தைக்கு மட்டும் போலியோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது . இதனால் பாகிஸ்தானில் இந்த வருடத்திற்குள் போலியோ நோயை ஒழிப்பதற்கான தீவிர நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . இதற்காக பாகிஸ்தானில் உள்ள பல இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த முகாமிற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. குறிப்பாக அல்கொய்தா இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடன் அமெரிக்கப் படையால் கொல்லப்படுவதற்கு முன்பாக பின்லேடன் குறித்த தகவல்களை சேகரிப்பதற்காக அவன் தங்கியிருந்த இடங்களில் பொய்யாக போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் சில தரப்பினர் கருதுகின்றனர். இதன் காரணமாகவே சொட்டு மருந்து முகாம்களை நடக்கவிடாமல் சில தரப்பினர் வருகின்றனர் . மேலும் முகாம்களில் சொட்டு மருந்து போடும் பணியில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்கள் மீதும் தாக்குதலை நடத்துகின்றனர். இதனால் இந்த முகாம்கள் நடைபெறும் போது மருத்துவ ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் போலீஸ் பாதுகாப்புடன் ஈடுபட்டு வருகின்றனர் .
இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள ஒரு பகுதியில் , இளம்பிள்ளைவாதம் நோயை தடுப்பதற்காக, சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இந்த சொட்டு மருந்து முகாமிற்கு 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் முகாமில் பாதுகாப்பு பணி முடிந்ததும் காவல் நிலையத்துக்குச் செல்வதற்காக 2 போலீசாரும் புறப்பட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு கையில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் 2 போலீசார் மீதும் தாக்குதலை நடத்தினார். இந்தத் தாக்குதலில் 2 போலீசாரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த 2 போலீசாரை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.