கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தம்பதியினர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூரில் பசீர் அகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பேகம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் இந்த தம்பதிகள் இருவரும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாயார் பகுதியில் இருக்கும் தனது மகளை பார்ப்பதற்காக காரில் சென்றுள்ளனர். இந்த காரை தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் கார்த்திக் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் இந்த கார் 21-வது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டிருந்த போது, திடீரென பிரேக் பழுதடைந்ததால் கட்டுப்பாட்டை இழந்து விட்டது.
இதனால் தாறுமாறாக ஓடிய கார் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் முகமது பஷீர் மற்றும் பேகம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் கார் டிரைவர் கார்த்திகை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.