அம்மை நோயால் தினமும் 45 ஆடுகள் உயிரிழக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நடந்தான்குளம் கிராமத்தில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் முத்துக்குமார் என்பவரும் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டு தினமும் 4, 5 ஆடுகள் பரிதாபமாக இறந்து விடுகிறது. இவ்வாறாக சந்திரனுக்கு சொந்தமான 53 ஆடுகளும், முத்துக்குமாருக்கு சொந்தமான 40 ஆடுகளும் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டது.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளை நம்பியே குடும்பத்தை நடத்தி வருவதால் தினமும் 4, 5 ஆடுகள் இறப்பது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் நோயால் பாதிக்கப்பட்ட மீதமுள்ள ஆடுகள் இறந்து விடுவோமோ என்று இருவரும் அச்சத்தில் உள்ளனர். எனவே கால்நடைத்துறை அதிகாரிகள் ஆடுகளுக்கு உடனடியாக தடுப்பூசி போடுவதற்கும், உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.