சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய வாலிபரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள ஓடையில் 600 லிட்டர் சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் பின் அதை கீழே கொட்டி காவல்துறையினர் அழித்துவிட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் வசிக்கும் வேல்முருகன் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.