Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. காவல் நிலையத்திலிருந்து எஸ்கேப்…. திருவாரூரில் பரபரப்பு….!!

சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்திய இருவர் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடகண்டம் பாலம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாராணி, சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை காவல்துறையினர் நிறுத்தி சோதனையிட்டதில் அதில் ஒரு அட்டை பெட்டிக்குள் 40 மது பாட்டில்கள் இருந்ததை கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காவனூரை சேர்ந்த மதுசூதனன், இலையூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய 2 பேரும் காரைக்கால் சென்று 40 மதுபாட்டில்களை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

இதனைதொடர்ந்து காவல்துறையினர் மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து மது கடத்திய 2 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மதுசூதனன், கார்த்திக் இருவரும் வீட்டிற்குப் போன் செய்து வருவதாக கூறி போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே சென்றுள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் மதுசூதனன் மற்றும் கார்த்திக் இருவரும் திரும்பி வராததனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் வெளியே சென்று பார்த்தபோது இருவரும் தப்பி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய இருவரை வலைவீசி தேடி வருகின்றனர். எனவே தப்பி ஓடியவர்களில் ஒருவரான மதுசூதனன் பா. ஜனதா விவசாய அணி மாவட்ட செயலாளராக இருக்கிறார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |