Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 3000 லிட்டர்… அடித்து பிடித்து ஓடியவர்கள்… வனப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்…!!

வன பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் கண்டுபிடித்து அழித்துவிட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சேரபட்டு வன சரகத்திற்கு உட்பட்ட குரும்பலூர் பகுதியில் உள்ள காப்பு காட்டில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சிலர் சாராயம் காய்ச்சுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்று வனதுறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அப்பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த கும்பலை  வனத்துறையினர் பார்த்துள்ளனர். இதனை அடுத்து வனத்துறையினரை பார்த்த சாராயம் காச்சிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. அதன் பின் அங்கு வைத்திருந்த 6 பேர்களில் சுமார் 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை வனத்துறையினர் கைப்பற்றி கீழே கொட்டி அழித்துவிட்டனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த வனத்துறையினர் தப்பிச் சென்ற கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |