Categories
தேசிய செய்திகள்

குடிக்க ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல்… இறந்து போன 5 வயது சிறுமி… கண்கலங்க வைக்கும் சம்பவம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் நீர் பஞ்சம் காரணமாக 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் வடமாநில பகுதிகளில் ஒன்றான ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பாலைவனமாகும். பெரும்பாலும் அங்கு வறண்ட சூழ்நிலையே காணப்படும். குறைந்தபட்ச நீர்த்தேவையை பூர்த்தி செய்யக் கூட இயலாத சூழ்நிலையே அங்கு நிலவி வருகிறது. கடுமையான வெப்பம் காரணமாக தண்ணீர் இல்லாமல் அப்பகுதி மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது வீட்டின் அருகே மயங்கி கிடந்துள்ளார்.

அவரின் ஐந்து வயது பேத்தியும் மூச்சுத்திணறி கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஐந்து வயது சிறுமி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் நீரிழப்பு நோய் காரணமாக உயிரிழந்ததாக தெரிவித்தனர். மேலும் மூதாட்டி மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |