திருமணத்தை நிறுத்திவிட்டு என்னுடன் பழகு என்று கூறி இன்ஸ்டாகிராமில் டார்ச்சர் செய்த இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் ஒரு நபர் மெசேஜ் செய்தார். முதலில் சாதாரணமாக பேசிய அந்த நபர் திடீரென ஒரு நாள் நான் உன்னை விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதை பார்த்த அந்த பெண் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது எனவும், அதனால் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளார். அதற்கு பின்னரும் அந்த நபர் தொடர்ந்து அவருக்கு மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். இதனால் அவரது அக்கவுண்டை செவிலியர் பிளாக் செய்துள்ளார்.
இந்நிலையில் புதிதாக வேறு ஒரு அக்கவுண்டில் இருந்து அந்த நபர் அவருக்கு மெசேஜ் அனுப்பி வைத்துள்ளார். அதையும் அவர் பிளாக் செய்துள்ளார். எத்தனை முறை பிளாக் செய்தாலும், புதிய புதிய அக்கவுண்ட் மூலம் தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஆபாசமாக பேசவும் ஆரம்பித்துள்ளார். உடனடியாக திருமணத்தை நிறுத்திவிட்டு என்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். இதனால் தனக்குப் திருமணத்திற்கு பிறகு ஏதாவது பிரச்சினை வந்து விடுமோ? என்ற பயத்தில் அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் இன்ஸ்டாகிராமில் வந்த மெசேஜை வைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.