Categories
மாநில செய்திகள்

குழந்தை தொழிலாளர் இல்லா மாநிலம்….. முதல்வர் ஸ்டாலின் உறுதி….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலம் என்ற நிலையை கொண்டு வருவதில் தமிழக அரசு உறுதியாக செயல்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆலய நவீன உலகை உருவாக்கும் சிறந்த சிற்பிகள் நம் குழந்தை செல்வங்கள் தான். குழந்தை தொழிலாளர் என்ற கொடுமையான வன்முறையில் இருந்து விடுவித்து கல்வியை உறுதி செய்வோம் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |