Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டிற்குச் செல்லும் போது பயண காப்பீடு கண்டிப்பாக தேவை… ஏன் தெரியுமா…? படிச்சு தெரிஞ்சுக்கோங்க…!!

இந்தியாவில் பல விதமான காப்பீடு திட்டங்கள் உள்ளது. பெரும்பாலும் இதன் அவசியம் குறித்து யாருக்கும் தெரிவதில்லை. இதில் தற்போது பயண காப்பீடு அவசியம் என்ன என்பதை பார்ப்போம்.

பயண காப்பீடு பெரும்பாலும் பயணத்தின் போது ஏற்படக் கூடிய எந்த ஒரு இழப்பு அல்லது சேதத்திற்கு ஈடு செய்யக்கூடிய காப்பீடு. பயணத்தின்போது உடமைகளை தவற விட்டாலும், பயணத்தில் திடீரென்று ரத்தானால்,  மருத்துவ பிரச்சனை அல்லது விமான கடத்தல் போன்றவற்றால் ஏற்படக்கூடிய செலவை ஈடுகட்ட உதவும் திட்டம் தான் பயண காப்பீடு திட்டம்.

இதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பார்ப்போம்.

பாஸ்போர்ட் இழப்பு சாமான்கள்,

பயண ஆவணங்கள் போன்றவை இழப்பு.

பயணத்தில் தாமதம் அல்லது தவறவிட்டது

விமானம் தொடர்பான விபத்துக்கள் போன்றவை.

ஓட்டுநர் உரிமம், இழப்பு விபத்துக்கள் அல்லது நோய் போன்ற மருத்துவ அவசரநிலைகள்.

கடத்தப்பட்டால் நிவாரண நன்மைகள்

அவசர பல் உதவி

நாட்டிற்கு வெளியே இறுதிச் சடங்கின் செலவுகள்.

மூத்த குடிமக்களுக்கு பணமில்லா மருத்துவமனை.

அனைத்துப் பயணங்களுக்கும் பயணக் காப்பீடு அவசியமில்லை என்றாலும், சரியான பாலிசி மூலம் உங்கள் பயண செலவிற்கு ஒரு பின்னணி வைத்துக் கொள்வது நல்லதே.

Categories

Tech |