Categories
தேசிய செய்திகள்

90,000 ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள்…. இந்தியாவில் இன்று இறக்குமதி….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கோவாக்சின், கோவிஷில்டு கொரோனா தடுப்பூசி போன்று ஸ்புட்னிக் தடுப்பூசியைப் பயன்படுத்தி கொள்ள இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்தது. இதையடுத்து ரஷ்யாவிலிருந்து ஸ்புட்னிக் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. நான்காவது முறையாக இறக்குமதி செய்யப்பட்ட 90,000 ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

Categories

Tech |