Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் வெளிநாட்டு செல்லும் மர்மம் என்ன ? முதல்வர் கேள்வி…!!

ஸ்டாலின் அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளுவதில் உள்ள மர்மம் என்ன என்று தமிழக முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம் மேற்கொள்கின்றார். இன்று கிளம்பும் அவர் வருகின்ற 10-ஆம் தேதி தமிழகம் திரும்புவார் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்காக இன்று காலை தமிழக முதல்வர் சென்னை விமானநிலையம் வந்தார். அங்கு அவருக்கு துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , அதிகளவில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாட்டுக்கு செல்கின்றோம். அடிக்கடி ஸ்டாலின்  வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார். சொந்த விஷயத்திற்காக வெளிநாடு செல்கிறார்கள். அடிக்கடி வெளிநாடு செல்லும் மர்மமென்ன . நாங்கள் வெளிநாட்டு பயணம் செல்வதை  கொச்சைப்படுத்தி பேசுகின்றார்.

Categories

Tech |