Categories
உலக செய்திகள்

“இந்திய தயாரிப்பான “கூ” தளத்தில் இணைந்தது நைஜீரியா!”.. ட்விட்டருக்கு அதிரடி தடை..!!

நைஜீரியா, ட்விட்டரை தங்கள் நாட்டில் தடை விதித்து, இந்திய நாட்டில் தயாரிக்கப்பட்ட “கூ” என்ற செயலில் அதிகாரபூர்வமாக கணக்கு ஒன்றை தொடங்கியிருக்கிறது.

நைஜீரியாவில் மக்கள் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் போர் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து நைஜீரியாவின், அதிபர் முகமது, தன் டுவிட்டர் பக்கத்தில் கடந்த 1967-70 வருடங்களில் நாட்டில் நடந்த உள்நாட்டு சண்டையை குறிப்பிட்டு  ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.

இந்த கருத்து கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் அதனை நீக்கி விட்டது. இதனால் கோபமடைந்த நைஜீரிய அரசு, தங்கள் குடிமக்கள் ட்விட்டரை உபயோகிக்க தடை அறிவித்தது. அதனை மீறி உபயோகிப்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்திருக்கிறது.

இதற்கு பதிலாக உடனடியாக நைஜீரியா, இந்தியாவின் “கூ” என்ற செயலியில் அதிகாரபூர்வமாக கணக்கை ஆரம்பித்துள்ளது. மேலும் அரசு தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல்கள் இந்த செயலியில் தான் இனிமேல் தெரியப்படுத்தப்படும் என்று கூறியுள்ளது. அதன் படி “கூ” மூலமாகவே அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.

இது உலக அரசியலில் சலசலப்பை உண்டாகியுள்ளது. ஆனால் இந்த செயலியை உருவாக்கியவர்களில் ஒருவராக இருக்கும் ராதாகிருஷ்ணன் என்பவர் “கூ” வில் சேர்ந்த நைஜீரியாவை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். மேலும் “கூ”  செயலி, தற்போது இந்தியாவை தாண்டி தன் இறகை விரிக்க ஆரம்பித்திருப்பதாக  கூறியுள்ளார்.

Categories

Tech |