தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவி பகுதியில் ஊரடங்கு விதிகளை மீறி கடைகளை திறந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் மிகவும் அழகிய சுற்றுலாத் தலமான சுருளி அருவி உள்ளது. தற்போது கொரோனா காரணத்தால் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதோடு, அங்கு இருக்கும் கடைகளை திறக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அருவி பகுதியில் இருக்கும் சாலையோர ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளை வியாபாரிகள் ஊரடங்கை மீறி நேற்று நடந்தது திறந்து வைத்துள்ளனர்.இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்துள்ளது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கம்பம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி,ஜெகநாதன் மற்றும் ஊராட்சி தலைவர் மொக்கப்பன் ஆகியோர் அருவிக்கு சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் கடைகளை மூடுமாறும், இதனை மீறி கடைகளை திறப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கடையின் உரிமையாளர்கள் உடனடியாக கடைகளை மூடியுள்ளனர்.