நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நடிகை நயன்தாரா கமர்ஷியல் படங்களில் மட்டுமல்லாது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Nayanthara's #Netrikann flies to Disney+ Hotstar for a Direct OTT release.
The team is planning for immediate premiere, mostly in July 2021. pic.twitter.com/xrX6uvRJZ7
— LetsCinema (@letscinema) June 11, 2021
இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கிரிஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நயன்தாரா நடிப்பில் உருவான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியானது குறிப்பிடத்தக்கது .