தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில், உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். இதனை அடுத்து தமிழகத்தில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் ஜூன் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கபடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் வாடகை வாகனங்கள், டாக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. வாடகை டாக்ஸிகளில் ஓட்டுனர் தவிர 3 பயணிகளும்,ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது என தெரிவித்துள்ளது.