Categories
தேசிய செய்திகள்

10 வருடங்களாக… குடும்பத்தினருக்கு கூட தெரியாமல் காதலியை மறைத்து வைத்து இருந்த காதலன்… வெளிச்சத்திற்கு வந்த கதை….!!!

கேரள மாநிலத்தில் குடும்பத்திற்கு தெரியாமல் 10 ஆண்டுகள் பெண்ணை வீட்டில் மறைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அயலூர் கிராமத்தை சேர்ந்த ரகுமான் என்பவர் வீட்டின் அருகே இருந்த பெண் சஜிதா. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சஜிதா மாயமானார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் ரகுமான் குடும்பத்தினரை காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது தனக்கு இதை பற்றி எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார். தற்போது 10 ஆண்டுகள் கழித்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

10 ஆண்டுகளாக ஒரு அறையில் சஜிதாவுக்கு பாதுகாத்து உணவு வழங்கியுள்ளார். சிறிய அறையில் ஜன்னல் ஒன்று இருக்கும் அதன் கம்பிகள் அகற்றி விட்டு வெளியில் வருவது போல் இருக்கும்.சஜிதா கழிப்பறையை பயன்படுத்த இரவில் மட்டும் வெளியில் வருவார். கம்பிகளை அகற்றிவிட்டு ஜன்னலுக்கு வெளியே குதித்து வீட்டிற்கு வெளியே குளியலறைக்கு செல்வார். அவர் நோய்வாய்ப்பட்டால் ரகுமான் மருந்து வாங்கிக் கொண்டு வந்து தருவார். அவரது அறையில் ஒரு சிறிய டிவி இருக்கும் அதை பார்த்துக்கொண்டு அவர் இருப்பார். இது போன்று 10 ஆண்டுகள் அந்த பெண்ணை மறைத்து வைத்து வாழ்ந்து வந்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக ரகுமான் வேலைக்கு செல்லவில்லை. வீடு வாடகைக்கு பணம் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. 2021 அவர் வீட்டை விட்டு வெளியேறி பாலக்காட்டில் உள்ள விதானசேரி என்ற கிராமத்தில் வாடகைக்கு வீடுஎடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ரகுமானை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அவரை தேடி கண்டுபிடித்த போது தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து இருவரையும் சேர்ந்து வாழும்படி நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இந்த விசித்திரமான கதையைப் பற்றி பதிலளிக்கப்படாத பல கேள்விகள் இருந்தாலும், இவ்வளவு சிறிய வீட்டில் சஜிதா இருப்பதை குடும்பம் எப்படி அறிந்திருக்கவில்லை என்பதிலிருந்து தொடங்கி, ரஹ்மானும் சஜிதாவும் ஏன் வெளிப்படையாக வாழ இவ்வளவு நேரம் காத்திருந்தார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Categories

Tech |